Sunday, August 22, 2010

ஆடி 18ம் பெருக்கு போட்டோக்கள்

நம் கோவிலின் ஆடி 18ம் பெருக்கு விழா போட்டோக்கள்

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி 18ம் பெருக்கு விழா

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் ஆடி 18ம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Saturday, July 17, 2010

ஆடி 18ம் பெருக்கு


ஆடி 18ம் பெருக்கு
*******************










வணக்கம் அன்பர்களே, ஆடி 18ம் பெருக்கு வரும் 3.8.2010 அன்று  வழக்கம் போல் நம் கோவிலில் சுவாமிகள் அனைவருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு விட்டு நான்கு வேன்களில் அழகர் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம் பங்காளிகள் அனைவரும் வழிபாட்டில் அவசியம் கலந்து கொண்டு அருளாசிகள் பெற அழைக்கிறோம்.
வேனில் அழகர் கோவிலுக்கு சென்று வர ஒருவருக்கு ரூ 100-. விபரங்களுக்கு விருதுநகர் ஜெயயோகன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.  நன்றி.




Sunday, May 16, 2010

நம் கோவிலின் சிறப்புகள் - 1

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சிறப்புகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இதில் நம் கோவிலின் வரலாறு, வழிபாடு, சிறப்பு என அனைத்தையும் பார்க்கப் போகிறோம்.

ஸ்ரீ அழகரின் பெருமைகள்

வணக்கம் அன்பர்களே, பூலோகத்தில் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமாலிருஞ் சோலை  என்று அழைக்கப்படும்

ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகம்

வணக்கம் அன்பர்களே, நம்மிடம் கோடிகணக்கில் பணம் கொட்டி கிடந்தாலும்
உண்மையான செல்வம் என்பது நோயற்ற வாழ்வுதான்.

Saturday, May 15, 2010

நமது கோவிலின் திருவிழாக்கள்

  • 1. சித்ரா பௌர்ணமி திருவிழா
  • 2. ஆடி 18ம் பெருக்கு (சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து அழகர் கோவிலுக்கு சென்று பொங்கலிடுதல்)
  • 3. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று மாலையில்   பொங்கலிடுதல்
  • 4. புரட்டாசி 3வது சனிவாரம்  மாலையில்   பொங்கல் வழிபாடு
  • 5. தை மாத பிறப்பன்று  மாலையில்  பொங்கல் வழிபாடு
  • 6. மாசி மாத கடைசி சனி மாதா வழிபாடு
மேற்கண்ட திருவிழா காலங்களில் நம் பங்காளிகள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

Wednesday, May 5, 2010

இனிதாக நிறைவு பெற்ற சித்திரை திருவிழா

நம் சித்திரை திருவிழாவின் நிறைவாக  2.5.10 சனிக்கிழமை அன்று தளிகை பொங்கல் வைத்து சுவாமிகள் அனைவருக்கும் பூஜை செய்யப்பட்டது.
உள்ளூர் பங்காளிகள் வந்திருந்து பெருமாளை வணங்கி கோவிலை சுத்தம் செய்தனர்.இவ்வாறாக சித்திரை திருவிழா இனிதாக நிறைவு  பெற்றது.

Saturday, May 1, 2010

நம் கோவில் சித்திரை திருவிழா படங்கள்

 















பெருமாளின் அருளாசிகள்

வணக்கம், நம் கோவிலின் திருவிழா சிறப்பாக நடந்தது. உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 27.4.10 அன்று காலையிலேயே நம் வெளியூர் பங்காளிகள் அனேக பேர் கோவிலுக்கு வந்திருந்தனர். காலை 10:30 மணிக்கு  அபிஷேகம்   ஆரம்பிக்கப் பட்டது. பின் 12:00 மணிக்கு மேல் நம் சுவாமிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.

Sunday, April 25, 2010

இன்று கோவிலில்

சித்திரை திருவிழாவிற்க்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று காலை நம் கோவிலில் 50 பங்காளிகள் ஒன்று சேர்ந்து நம் சுவாமிகள் அனைவரையும் திருநீராட்டி, கோவிலையும் சுத்தப்படுத்தினோம். பின் சுவாமிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து பூஜை செய்து அவர்களின் அருளை பெற்று மகிழ்ந்தோம். சென்ற ஒரு ஆண்டாக சரியாக மழை பெய்யாத எங்கள் விருதுநகரில் இன்று நம் சுவாமிகள் அருளாசியால் நல்ல மழை பெய்தது.

Saturday, April 24, 2010

நம் சுவாமிகளின் பாடல்கள்

பெருமாள் ஸ்லோகம்
ஓம்    நாராயணாய வித் மஹே வாசு தேவாய தீமஹீ
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

சித்திரை திருவிழா

27.4.2010
காலை 9.00 மணிக்கு மேல் அபிஷேகம்
              12.00 மணிக்கு மேல்  அலங்காரம் செய்து உச்சி கால பூஜை
மாலை 5.00 மணிக்கு மேல்  பூர்வீக கோவிலில் இருந்து திரி எடுத்து   அனைவரும்    ஊர்வலமாய் பெரிய கோவிலுக்கு செல்லுதல்
மாலை 7.00 மணிக்கு மேல் சுவாமிகளுக்கு பூஜை

சித்திரை திருவிழா 2010

வணக்கம்,  நம் கோவிலில் சித்திரை திருவிழா வரும் 27.4.10 முதல் 29.4.10 வரை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம். நம் பங்காளிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பெருமாள், மாதா சாமி, கோவிந்த விநாயகர், கருப்ப சாமி, சப்பாணி சாமி அருள் பெற வேண்டுமாய்  கேட்டு கொள்கிறேன். நன்றி