Sunday, April 25, 2010

இன்று கோவிலில்

சித்திரை திருவிழாவிற்க்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று காலை நம் கோவிலில் 50 பங்காளிகள் ஒன்று சேர்ந்து நம் சுவாமிகள் அனைவரையும் திருநீராட்டி, கோவிலையும் சுத்தப்படுத்தினோம். பின் சுவாமிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து பூஜை செய்து அவர்களின் அருளை பெற்று மகிழ்ந்தோம். சென்ற ஒரு ஆண்டாக சரியாக மழை பெய்யாத எங்கள் விருதுநகரில் இன்று நம் சுவாமிகள் அருளாசியால் நல்ல மழை பெய்தது.

இதில் ஒரு ஆச்சர்யம், மழை அதிகமாக பெய்தது  ஊருக்குள் விட நம் கோவில் பகுதியில் தான். பெருமாள் சித்திரை திருவிழாவிற்க்கு தன்னை நாடி வரும் பக்தர்கள் வெய்யிலால் வாடி விடக்கூடாது  என்றுதான் இன்று மழையை பொழிந்து இருக்கிறார். வெய்யிலில் கூட பக்தர்கள் வாடி விடக்கூடாது  என்று
நினைக்கும் நம் பெருமாளை சித்திரை பெருவிழாவில் நம் பங்காளிகள் அனைவரும் கண்டிப்பாக தரிசித்து நம் துன்பங்கள், கவலைகள், கஷ்டங்களை
தீர்ப்போம். கண்டிப்பாக சித்திரை திருவிழாவிற்க்கு  நம் பங்காளிகள்அனைவரும் வாருங்கள், ஆனந்தமாய் நம் சுவாமிகள் அனைவரையும்  கொண்டாடுவோம். கோவிலில் சந்திப்போம். நன்றி.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய