வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் ஆடி 18ம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 8:45 மணிக்கு
நம் சுவாமிகள் அனைவருக்கும் அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டது. நம் பங்காளிகள் அனைவரும் தங்களால் இயன்ற அளவு இளநீர்,
பால், பன்னீர், சந்தனம், புஷ்பங்கள், பழங்கள், வாங்கி வந்து நம் சுவாமிகளுக்கு சமர்ப்பித்தனர். மேலும் தங்கள் வீட்டிலேயே தயாரித்த பிரசாதங்களையும், பேரிச்சை, கல்கண்டு, பழவகைகளையும் நம் சுவாமிகளுக்கு சமர்ப்பித்தனர்.
ஏராளமான பங்காளிகள் கலந்து கொண்டு பெருமாள், மாதா,கோவிந்த விநாயகர், கருப்பசாமி, சப்பாணிசாமியின் அருளாசி பெற்று மகிழ்ந்தனர். பின் சுவாமிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து பூமாலை சூட்டி மதியம் 12:00 மணிக்கு மேல் பக்தர்களின் கோவிந்தா
கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட நம் சுவாமிகள் அனைவருக்கும் நம் பூசாரியார் தீபாராதனை காட்டி வணங்கி மகிழ்தோம்.
பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின் நான்கு வேன்களில் நம் பங்காளிகள் அனைவரும் அழகர் கோவிலுக்கு கிளம்பினோம். மதுரையை அடுத்த புதூரில் மதிய உணவை முடித்து கொண்டு அழகர் கோவிலுக்கு சென்றோம். அங்கு பொங்கல் வைத்து
அனைவரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், சுந்தரவல்லி தாயார், பதினெட்டாம் படி கருப்பசாமி, சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மரை தரிசித்து விட்டு
பொங்கல் பிரசாதம் சாப்பிட்டு விட்டு அழகர் கோவிலில் இருந்து கிளம்பினோம். வரும் வழியில் சூரியநாராயணர் கோவிலையும் வணங்கினோம். இரவு 9:00 மணியளவில் விருதுநகர் வந்து நம் கோவிலில் சுவாமி கும்பிட்டு கிளம்பினோம். ஆடி 18ம் பெருக்கு போட்டோக்கள் அடுத்த பதிவில். நன்றி

No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய