Sunday, May 16, 2010

ஸ்ரீ அழகரின் பெருமைகள்

வணக்கம் அன்பர்களே, பூலோகத்தில் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமாலிருஞ் சோலை  என்று அழைக்கப்படும்
அழகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளை குலதெய்வமாக பெற்று இருப்பது தில்லை கோவிந்தன் வகையறாவில் பிறந்த நாம்  செய்த பாக்கியமாகும். கலியுகத்தில் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவற்றில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெற எல்லோரும் தங்கள் குலதெய்வத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டு பலன் பெறுவதை தவிர வேறு எளிய வழி கிடையாது.
நம் குலதெய்வ கோவில் பற்றியும், எனக்கு தெரிந்த விஷயங்களையும், பெரியவர்களிடம் கேட்டு தெரிந்த விஷயங்களையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். 
எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் குறிப்பாக என் குருநாதர் ஜெ.ஜெயக்கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதனால் வரக்கூடிய பெருமைகள் அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனையே சேரும். ஏதாவது குறைகள் இருந்தால் கருத்துக்களை தெரிவிங்கள் திருத்தி கொள்கிறேன். நன்றி  

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய